அன்பிற்குரிய பில் கேட்ஸ்,
.
சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
.
.
1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
.
2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது சென்னை பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
.
3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
.
4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
.
5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?
.
6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.
.
7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
.
8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.
.
9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?


