Friday, 14 June 2013

முரண்பாடு - கடவுள்

# படித்ததில் பிடித்தது

அந்த சிறுவன் தன் தந்தையிடம் கேட்டு வாங்கிய மாலையை சாமி படத்திற்கு போட்டது.

பின் தன் தாத்தா படத்திற்கும் போட்டது.

பின் தன் பாட்டி படத்திற்கும் போட சென்றது.தந்தை தடுத்தார்.

குழந்தை ஏனப்பா? என்றது

பாட்டி உயிருடன் இருக்கிறார் அதனால் போட கூடாது.
தாத்தா இறந்து விட்டார் அதனால் மாலை போடலாம்.

சிறுவன் கேட்டான் அப்போ சாமியும் செத்து விட்டதாப்பா?
-வெ.இறையன்பு

Thursday, 13 June 2013

ஆசைகளே கனவுகளாய் - உறவுகள்





ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதைக் கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்தக் கட்டுரையை படித்துப் பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியைப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னைச் சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னைச் சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்புக் கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும். என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை, நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்தக் குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையைக் கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்தக் கட்டுரையை எழுதியது நம் மகன்".

Wednesday, 12 June 2013

மனதைத் தொட்ட வரிகள்



  • ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

       
  •  தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
      
       
  •  பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.     

  • அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!
    .
       
  •  மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை

       
  •  ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். 
 
  • பொது இடங்களில் நாம் தின்பண்டங்கள் தின்னும்போது அது தவறி விழும் பட்ச்சத்தில் நாம் கெளரவ குறைச்சல் காரணமாக அவற்றை திரும்ப எடுப்பதில்லை அதே நாம் வீட்டில் சாப்பிடும்போது

     
  • மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும்
    பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்


     
  • வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி


     
  • வாழும்போதும் வாழ்ந்து முடித்த பிறகும்...
    சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......
    வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது
     
    • நம்பிக்கை நிறைந்த
      ஒருவர், யாரிடமும்
      மண்டியிடுவதுமில்லை...
      கையேந்துவதுமில்லை....


    நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!
    நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!