Monday, 26 August 2013

FACEBOOK குசும்பு

" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

"
என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "

"
இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

"
என்னாது போரா..? நாம் தான் அவன் போடும்
எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக்
போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு
வருகிறான்.. "

"
அவர் அந்தபுரத்தில் இருக்கும் 2 ராணிகளுக்கு
நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... "

"
ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கெல்லாமா
போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!! "

Friday, 23 August 2013

புத்திசாலித்தனமா இருக்கணும்பா........



ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2
உங்களுக்கு முதுமையே வராது

3
பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்காடினார்.

நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தார் .

"
இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே" என்று நீதிபதி கேட்டார்

அதற்க்கு அவன் "சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்"

"
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்"

"
ஆமாம் வரமாட்டான் ... காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும். இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்"

2
வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும் சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்?

3
வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது. எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது"

#
இது சிரிக்க அல்ல சிந்திக்க

Wednesday, 21 August 2013

நக்கல் - கண்டிப்பா சிரிக்கணும்



விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.

சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.

கணவனோ முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறேன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.

யாரது?” என்று மனைவி கேட்டாள்.

எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்

நீங்க உதவி செஞ்சீங்களா?”

இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”

பார்த்தீங்களா? 3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்

கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.

ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”

ஆமா சார்

ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”

ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்

எங்கே இருக்கீங்க

இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க

Tuesday, 20 August 2013

இவரு தாம்பா மனுஷன்





காமராசர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த நிகழ்வு இது. எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்களுக்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு காமராசரிடம், ""உங்களுடைய கோட்டா 20 சீட்கள் மிச்சமிருக்கின்றன'' என்று அதிகாரிகள் கூறினர்.

உடனே விண்ணப்பங்களை வாங்கி மளமளவென்று 20 மாணவர்களைத் தேர்வு செய்து தந்தார் காமராசர்.

எந்த அடிப்படையில் தேர்வு செய்தார் என்பதை அதிகாரிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரிடமே அதைக் கேட்டார்கள்.

அதற்கு காமராசர், ""நான் தேர்வு செய்த மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். எல்லோரும் விண்ணப்பத்தில் கைநாட்டு போட்டிருக்கிறார்கள். இதைப் பாருங்கள்'' என்று கூறினார்.

அதிகாரிகள் ஆச்சரியப்பட்டு, காமராசரின் சமுதாய அக்கறையை நினைத்துப் பார்த்து வியந்து போனார்கள்