Thursday, 25 July 2013

நண்பன்- நினைவுகள்





நண்பர்களிடையே
சில மறக்க
முடியாத
நினைவலைகள் :-

1. நண்பன் கையை
பிடித்துக் கொண்டு
நடப்பது!.

2. நண்பனின்
தோள்பட்டையில்
சாய்ந்து கொள்வது !!.

3.நண்பனோட
சாப்பாட்டை பிடுங்கி
சாப்பிட்டது.

4. நண்பனுக்காக
பணம் செலவு
செய்வது,
அதை அவன் திருப்பி
கொடுக்கிற போது,
"உள்ள வைன்னு
சொல்றது" !!!!.

5. நண்பன் அழும்போது,
நம்ம கண்ணுலேயும்,
தானா கண்ணீர்
வருவது ?!.

6. தெருத்தெருவா,
ஊர் சுத்திவருவது !.

இதுதான் புத்திசாலித்தனமோ



தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க ...

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார்.

அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் அப்பாவுக்குஎன்று எழுதியிருந்தது.

பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

அன்புள்ள அப்பா,
மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.

உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், நகைகள் அணிந்திருந்தாலும் அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசமிருந்தாலும் (42 இப்போதெல்லாம் ஒரு வயதல்ல), அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.

டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று எனது வாழ்க்கையில் தனி இடம் கொடுத்திருக்கிறேன். என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு காட்டுக்கருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது. அங்கு நாங்கள் தங்கியிருப்போம். அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம். கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும். எனக்கு பதினைந்து வயதாகிறது. என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக் குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
ஏஞ்சலோ.

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது.
கடிதத்தின் கீழே பின் பக்கம் பார்க்கஎன்று எழுதியிருந்தது.

துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:
பின்குறிப்பு; அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறத. இதையெல்லாம் பார்க்கும்போது நான் ஒரு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றுமே கிடையாது. எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது. எடுத்து கையெழுத்து போடுங்கள். நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.

தற்போது தந்தையின் மனநிலை என்னவாக இருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!!!

Monday, 22 July 2013

முட்டாள் = பைத்தியம்



இந்த உலகில் முட்டாள்களும் ஒரு வகையில் பைத்தியக்காரர்கள் மாதிரி தான். அவர்கள் சொல்வது தான் சரி என்று கடைசி வரை சாதித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆள் டாக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டாக்டர் விசாரித்தார்.

"சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?"

"எனக்கு வயிறு வலிக்குது டாக்டர்"

"நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டாக்டர் அடுத்த தெருவுல இருக்கார்."

"அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டாக்டர்"

"சரி எதனால வலி?"

"நான் ஒரு குதிரையை முழுங்கிட்டேன்!"

"ஓ...அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு!"

உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டாக்டர், உயிருள்ள ஒரு குதிரையை கொண்டு வந்து மருத்துவமனை வாசலில் கட்டச் செய்தார். தூங்கி எழுந்ததும், டாக்டர் அவனருகில் சென்று சொன்னார்.

"அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது"

"நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?"

"நீ நிஜமாவே ஒரு பெரிய குதிரையை முழுங்கியிருந்தே..அதை ஆபரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட... அந்த குதிரையும் பிழைச்சிட்டுது"

"அப்படியா டாக்டர்...அந்தக் குதிரையை நான் பார்க்கலாமா?"

"வாசலில் கட்டிப் போட்டிருக்கேன். வந்து பார்"

அவன் மெல்ல எழுந்து, அடி மேல் அடி வைத்து வாசல் பக்கம் போனான். அங்கே குதிரையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டாக்டர் பக்கம் திரும்பினான். டாக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.

"பளார்!!"

எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டாக்டர், "எதுக்குய்யா என்னை அடிச்சே" என ஆவேசமாக கேட்டார்.

"நீங்க ஒரு போலி டாக்டர். நான் முழுங்குனது வெள்ளை குதிரை. ஆனா நீங்க கறுப்பு குதிரையை காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!"

டாக்டர் மயங்கி விழுந்தார்.