Wednesday, 3 July 2013

விவசாயி -2013





"மால்"க்கு போறாங்க...

கார், பைக்குக்கு பார்க்கிங் கட்டணம்....

வாங்கும் பொருட்களில் அவன் வைத்ததே விலை...

ஒரு சட்டை ரூபாய்..750...1000...1500 என..

பேரம் என்பதே கிடையாது....

ஆனால்,

விவசாயப் பொருட்களில்...

தக்காளி 60 ரூபாய்

பீன்ஸ் 90 ரூபாய்

வெங்காயம் 80 ரூபாய் என்றதும்...

வாயைப் பொழக்கிறார்கள்.....

உச்சி வெயிலில்...

கந்து வட்டிக் கடனில்...

உடலை வருத்தி உழைத்து உருவாக்கிய பயிர்களுக்கு....

உரிய விலை கிடைக்காவிட்டால்....

நமக்காய் நாளும் உழைக்கும் விவசாயி

மண்ணையா தின்பான்!!???

இத்தனைக்கும் அந்த பணம் அனைத்தும் விவசாயிகளிடம் போய் சேர்வதில்லை பெரும்பாலும் இடைத்தரகர்களால் உறிஞ்சப்படுகிறது!

No comments:

Post a Comment